• Apr 23 2026

கோடிக்கணக்கான பார்வையாளர்களின் மனதை வென்ற 'பவழ மல்லி'.. ஒரு பாடலுக்கு இவ்வளவு வியூஸா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் இசை உலகில் புதிய தலைமுறை இசையமைப்பாளர்களில் கவனம் ஈர்த்து வருபவர்களில் ஒருவராக திகழ்கிறார் சாய்அபயங்கர். தனித்துவமான இசை, இன்டீ ஸ்டைல் முயற்சிகள் மற்றும் புதுமையான கான்செப்ட்கள் மூலம் சாய் இளம் ரசிகர்களிடையே தனது இடத்தை படிப்படியாக வலுப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள “பவழ மல்லி” என்ற இன்டீ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த பாடலின் வரிகளை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும், பாடகியும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தனது குரலில் பாடியிருப்பது இந்த பாடலுக்கு கூடுதல் கவர்ச்சியை அளித்துள்ளது. சுருதி ஹாசனின் மென்மையான குரலும், சாய் அபயங்கரின் மெல்லிசை கலந்த இசையும் இணைந்து பாடலை மிகவும் இனிமையான அனுபவமாக மாற்றியுள்ளது.

இப்பாடலின் இன்னொரு முக்கிய அம்சமாக, வீடியோவில் சாய் அபயங்கர் மற்றும் நடிகை கயாடு லோகர் இணைந்து நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கெமிஸ்ட்ரி மற்றும் அழகான காட்சியமைப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பாடலின் ஒவ்வொரு ஷாட்டும் செம்மையாக அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


“பவழ மல்லி” பாடல் வெளியான சில நாட்களிலேயே யூடியூபில் அதிரடியான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவிலான வரவேற்பு, பாடலின் பிரபலத்தையும், இன்றைய இளம் தலைமுறையின் இசை விருப்பங்களையும் வெளிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement