• Dec 25 2024

"ஒரே ஒரு முறை பேசணும்" பிக்பாஸிடம் கெஞ்சும் முத்து! முத்துக்காக அழும் பவித்ரா!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் இன்று  சில சம்பவங்கள் நடைபெறுகிறது அதில் முத்து பிக்பாஸிடம் உங்களோட பேசவேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார். முத்துக்காக பவித்ராவும் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகிறது. அது குறித்து பார்க்கலாம்  


சவுந்தர்யா,ஜெப்ரி,ராயன் ஆகியோர் வெளியிலிருந்து கதைத்து கொண்டு இருக்கிறார்கள் அப்போது சவுந்தர்யா "நம்ம இந்த வீட்டுக்குள்ள எல்லோரும் தனியாத்தான் வந்தோம் தனியாத்தான் விளையாடனும். ஆனா இங்க பாதி பேர் இவன் ஜெயிச்சா எனக்கு ஓகே அவன் ஜெயிச்சா எனக்கு ஓகேன்னு இருக்குறவங்கத்தான் அதிகம். ஜெயிக்கணும்னு வந்துட்டு, என் பிரன்ட் ஜெயிச்சா போதும்னு சொன்னா, அப்ப எதுக்கு இங்க வரணும்" என்று சொல்கிறார். 


75 வது நாள் செலிப்ரேஷனுக்காக ப்ரோமோஷன் நடந்தது அது முடிய வீட்டுல உள்ள எல்லாருக்கும் விதவிதமான சாப்பாடு வழங்கப்பட்டது. இதனை பார்த்த எல்லோருக்கும் மகிழ்ச்சி அனைவரும் ஒன்றாக இருந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் முத்து எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று சொல்லி விட்டு ரூம்க்கு போய் பீக்பாஸிடம் நான் ஒரே ஒரு முறை உங்களோட பேசணும்" என்று கேட்டு கெஞ்சி அழுது கொண்டு இருக்கிறார். அதே போல பவித்ராவும் கேமரா முன் வந்து "முத்து ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்காரு அவரை மட்டும் கொஞ்சம் கூப்பிட்டு பேசுங்க பிக்பாஸ்  என்று சொல்கிறார். பிக்பாஸ் முத்துவை கூப்பிட்டு பேசுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement