• Dec 25 2024

முத்து மீனாவுக்கு விழுந்த செருப்படி.. இனியும் அந்த வாசற்படி மிதிப்பாங்களா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நாளாந்தம் ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஆர்பி ரேட்டிங்கிலும் தமிழ்நாட்டில் முதல் இடத்தை பெற்றது.

இந்த சீரியலில் தற்போது மீனா தனது விருப்பப்படி கொலு வைப்பதற்கான பூஜைகளை நாளாந்தம் செய்து கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் தான் தப்பிப்பதற்காக முத்து மீனாவை எப்படியாவது பிரச்சினையில் சிக்க வைக்க வேண்டும் என்று ரோகினி முத்துவின் போனை எடுப்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது வெளியான புதிய ப்ரோமோவில், வீட்டில் கொலு பூஜைகள் நடைபெறுவதால் ரோகிணியின் அம்மாவையும் க்ரிஷையும் வீட்டிற்கு வருமாறு நேரில் சென்று முத்து, மீனா அழைக்கின்றார்கள். அது போலவே க்ரிஷ் கிருஷ்ணன் வேடம் போட்டு விஜயா வீட்டிற்கு வருகின்றார்.

இதை பார்த்த ரோகிணி ஓடிப் போய் க்ரிஷை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றார். இதை முத்துவை மீனாவும் அதிர்ச்சியாக பார்க்கின்றார்கள். 


அதன் பின்பு முத்து க்ரிஷை மடியில் வைத்து நீ இப்படியே எங்க கூட இருக்கிறீயா? என்று கேட்க, ரோகிணியின் அம்மா இதுதான் சான்ஸ் என போதும் நிறுத்துங்க.. ஏன் இப்படி சின்ன பிள்ளைட மனச கெடுக்க பாக்குறீங்க என்று கத்த, முத்து இப்ப நீங்க கோவப்படுற மாதிரி என்ன நடந்தது என்று கேட்கிறார்.

ஆனாலும் கிரிஷுக்கு பாட்டி நான் இருக்கேன் அம்மாவும் இருக்கின்றார். அவன் அனாதை இல்லை. இனி தத்தெடுக்குற விஷயத்தை பற்றி பேச வேண்டாம்.. எங்களுடைய வீட்டுக்கு வரவும் தேவையில்லை என்று எல்லோர் முன்னிலையிலும்   முத்து மீனாவை அசிங்கப்படுத்திவிட்டு செல்கின்றார். இதனால் மீனா அழுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement