• Jan 08 2025

நரிக்குறவர் மக்களை கருடன் படம் பார்க்க மறுக்கப்பட்ட அனுமதி! ராஜ மரியாதையுடன் அழைத்துவரப்பட்ட குழந்தைகள்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் சமீபத்தில் சாதி வன்கொடுமை என்பது அதிகமாக உள்ளது என்றே கூறலாம். பல துறைகளில் காணப்பட்ட இந்த பிரச்சனை சமீபத்தில் சினிமாவிலும் வந்துள்ளது நரிக்குறவர் இன மக்கள் கருடன் திரைப்படம் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 


RS துரை செந்தில்குமார் எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம் கருடன் ஆகும் வெற்றிமாறனின் கதை மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்ததுஇப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் எம். சசிகுமார் , உன்னி முகுந்தன் , ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி , ராஜேந்திரன் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே கடலூரில் உள்ள திரையரங்கில் 'கருடன்' படம் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது  வட்டாட்சியர் மூலம் அரசு வாகனத்தில் நரிக்குறவர் இன குழந்தைகள் அழைத்து வரப்பட்டு படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

Advertisement

Advertisement