• Dec 25 2024

தளபதி வெற்றி கழகம் கட்சியில் இணைந்த "வாழை" திரைப்பட நடிகர்! வைரலாகும் புகைப்படம்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தனது 69வது திரைப்படத்தின் பின்னர் சினிமாவில் இருந்து விலகி மக்களுக்காக முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுவரையில் விஜயின் படங்களை கொண்டாடிய கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர்.


ஆனால் ஒருசிலர் அவர் அரசியலுக்கு வருவதை நிராகரித்தும் பலர் அவரின் வருகையை ஆதரித்தனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்று கட்ச்சியை ஆரம்பித்து கட்சி சின்னம், கொடி, கட்ச்சிபாடல் என்பனவற்றை அறிமுகம் செய்தார்.இதன் பின்னர் இவருடைய தொண்டர்களாக ரசிகர்கள் பலர் இணைந்தனர்.


tvk பெயர் சொல்லி பல உதவிகளை செய்தனர். அத்தோடு விஜய் மாபெரும் மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடாத்தி விஜய்க்கு பேச தெரியாது என்று சொன்னவர்கள் வாய் அடைக்கும் விதமாக பேசி இருந்தார். இதன் பின்னர் tvk கட்சி உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.    


இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "வாழை" . இது மாரிசெல்வராஜின் வாழ்க்கை திரைப்படமாக அமைந்தது. விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்ற இந்த திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. பல முக்கிய பிரபலங்களும் இந்த திரைப்படத்தினை பார்த்து விட்டு பாராட்டினார். 


இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சிவனைந்தன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பொன்வேல் என்ற சிறுவன் தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்ச்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சால்வையை போர்த்தி கௌரவித்தனர் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள்.   


Advertisement

Advertisement