• Dec 26 2024

13 வருசத்துக்கு முன்னர் பிரபல சீரியல் நடிகை எடுத்துக் கொண்ட போட்டோ! இது யாருன்னு தெரியுதா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. 

இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கணவன் இல்லாமல் குடும்பத்தை தனது சொந்த செலவில் பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண் குறித்தே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியலில் பாக்கியா என்னும் கதாப்பாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகின்றார். இவர் இது தவிர பிற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான் எனலாம். 


தற்போது தனது முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் ஆரம்பித்து உள்ளார். அவருக்கு போட்டியாக கோபியும் சாப்பாடு கடை போடவுள்ளார். இனி இதன் கதைக்களம் கொஞ்சம் விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பாக்கியா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும்  சுசித்ரா, தனது இளம் வயது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த பலரும் இது நம்ம பாக்கியாவா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement