• Dec 27 2024

திடீரென வைரலாகும் சீரியல் நடிகையின் புகைப்படங்கள்! மொச்சும் ரசிகர்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களை நடித்து வந்தார். அவருக்கு என்று தனி பேன்ஸ் பேஜ்  காணப்படுகிறது.

பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடிக்கும் போது நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் ஒன்பது வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள், அதற்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தற்போது வரையில் பிரிந்து வாழ்கின்றார்கள்.

தனது காதல் மனைவி ஆன ரட்சிதாவுக்காக தினேஷ், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரின் ஆசையும் நிறைவேற்றி வைத்திருந்தார். ஆனாலும் இவர்கள் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.


தற்போது ரச்சிதா தனது சினிமா வாழ்க்கையில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகின்றார். அடிக்கடி தனிமையில் இருப்பது போலவும், வேறு எந்த துணையும் வேண்டாம் எனக்கு அம்மா மட்டும் போதும் என்றும் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அதில் அவர் சிரித்துக் கொண்டிருக்கும் அழகை பார்த்த ரசிகர்கள் எப்பவும் இப்படியே இருங்க என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement