• Oct 26 2024

உண்மை காதல் கேப்சனுடன் பிரியங்கா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் !

Nithushan / 4 months ago

Advertisement

Listen News!

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் தமிழ் ரசிகர்களின் முக்கிய கிரஷான பிரியங்கா மோகன் என அறியப்படும் பிரியங்கா அருள் மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றும் ஒரு நடிகை ஆவார்.இவர்  2019 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார்.


மேலும் தெலுங்கு படமான கேங் லீடர் மற்றும் தமிழ் படங்களான டாக்டர் , டான் மற்றும் எதர்க்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்து வருகிறார்.இவர் இந்தாண்டு தனுஷ் நடித்து வெளியான கேப்டன் மில்லர் படத்தில் வேல்மதி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


இந்நிலையில் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உண்மை காதல் எனும் கேப்சனுடன் நீல நிற ஆடையில் இருக்கும் போட்டோசூட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.இது தற்போது ரசிகர்களிடையே பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement