• May 24 2026

அன்றே கணித்த பூஜா ஹெக்டே! விஜய் முதல்வர் ஆவது முன்பே தெரியுமா?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டதுடன், மே 7ஆம் தேதி பதவியேற்பு நடைபெற உள்ளது. 


இந்த சூழலில், நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது சமூக வலைத்ளப் பதிவில், “விஜய் CM ஆக இருப்பதை நான் முன்பே கணித்துவிட்டேன். கனவுகள் நனவாகியிருப்பதற்கு வாழ்த்துகள், விஜய் சார்!” என்று தெரிவித்துள்ளார். இதனுடன், “ஜனநாயகன்” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில், விஜய்யின் எதிர்காலத்தை பற்றிய சுவாரஸ்யமான தருணம் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. பலரும் பூஜா ஹெக்டேவின் கணிப்பு தற்போது நனவாகி விட்டதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement