• Dec 26 2024

'தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு' ரெட் கார்டை வைத்து கொண்டாடும் பிரதீப்! கமலை சீண்டும் நோக்கமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சூப்பராக விளையாடி வந்தார் தான் பிரதீப். இதனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால்,  ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அனுப்பிய ரெட் கார்டை தனது நெருங்கிய உறவுகளோடு சந்தோசமாக கொண்டியுள்ளார் நம்ம பிரதீப்.

அதன்படி, 'Laugh is on you'  என பதிவிட்டு கமலையும் குறித்த பதிவில் டெக் பண்ணி உள்ளனர். இதன் மூலம் 'கப்பா முக்கியம் பிகிலு' நாம இதனை நாள் இருந்ததே வெற்றி தான். வெளில ஏரளாமான அன்பு உள்ளங்கள் எனக்காக இருக்காங்க' அத்துடன் தனது ரெட் கார்டை நினைத்து சிரிக்கும் அளவிற்கு தனது தோல்வியையும் வெற்றியாக கொண்டாடியுள்ளார் பிரதீப். குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement