• Dec 26 2024

''ஒன்றாக நிற்கும் பொறுக்கிஸ்''பிக்பாஸ் மணி, ADK தொடர்பில் பிரதீப் வெளியிட்ட சர்ச்சைப் பதிவு! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7  இரண்டு வீடு என புதிய கான்செப்டுடன் கடந்த அக்டோபர் 1ம் திகதி தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கப்பட்டு ஒருமாதம் கடந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். 


அவரது வெளியேற்றம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இன்றளவில் மட்டும் தொடர்ந்து வருகின்றது. அதுபோல் பிரதீப்பும் பிக் பாஸ் போட்டியாளர்களை சீண்டும் வகையில் ஏதாவது ஒன்றை செய்தவாறே உள்ளார்.


ஒருபக்கம் அவர் செய்வது நியாயம் என கொண்டாடும் ரசிகர்கள், மறுப்பக்கம் அவருக்கு இது சரியான தண்டனை என தீட்டித் தீர்க்கும் பிரபலங்கள். இவ்வாறு பிக் பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேறிய பிரதீப்பின் விவகாரம் சமூக வலைத்தளங்களில் இன்று மட்டும் புகைந்து வருகின்றது.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இன் பைனலுக்கு தெரிவான ஆண் போட்டியாளர்களை சீண்டி வந்த பிரதீப், தற்போது பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான ADK என்பவரையும் சீண்டி பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், இனம் இனத்தோட தான் சேரும் என மணியையும்  ADK யையும் பற்றி பதிவிட்டுள்ளார். குறித்த பதிவுடன் பகிரப்பட்ட வீடியோ இதோ...


Advertisement

Advertisement