• Jul 21 2026

தமிழகத்தின் தலையெழுத்து மாறிவிட்டது..- ஸ்டாலின் வீழ்ச்சியால் பிரகாஷ் ராஜ் ஆவேசம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 காலை தொடங்கி நள்ளிரவு வரை நீடித்து, 234 தொகுதிகளிலும் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் பல எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.


இந்தச் சூழலில், நடிகரும் சமூக விமர்சகருமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அவர் பதிவில், “வணக்கம் தமிழ்நாடு. காமராஜர் தோற்றார். மு.க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். 

சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது; அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி எப்போதும் எதிர்க்கட்சிப் பணி தான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது. தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலையின் மாற்றத்தைக் காட்டுவதாகவும், பாரம்பரிய அரசியல் அணுகுமுறைகளுக்கு புதிய சவாலாகவும் கருதப்படுகிறது. 

Advertisement

Advertisement