• Dec 27 2024

இந்தியாவிலேயே முதல் VFX இயக்குனர் நான் தான்.. என் படத்துல தான் முதல் CG வந்துச்சு: பிரசாந்த்

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

இந்தியாவிலேயே முதல் VFX இயக்குனர் நான்தான் என்றும் என்னுடைய படத்தில் தான் முதன்முதலாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றது என்றும் நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு இணையாக பிரசாந்த் பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பாக அவருடைய ரொமான்ஸ் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து வருடம் நடிக்காமல் இருந்தவர் 2011 ஆம் ஆண்டு ரீஎண்ட்ரி ஆனாலும் அதன் பிறகு அவர் நடித்த சில படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை.  இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் ’கோட்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவர் தனியாக ஹீரோவாக ‘அந்தகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.



இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தான் நடித்த ‘ஆணழகன்’ திரைப்படம் தான் இந்தியாவிலேயே முதல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றது என்றும் அப்போதே அந்த படத்திற்கு நாங்கள் அதிகம் செலவு செய்தோம் என்றும் குறிப்பாக ’ஏலே மச்சி’ பாட்டில் நாங்கள் சிஜி வேலை செய்தோம் நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவிலேயே முதல் VFX டைரக்டர் நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘ஆணழகன்’ திரைப்படத்தில் இளைஞர்கள் சிலர் ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவர்களை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் வீடு வாடகைக்கு கேட்டும் கிடைக்காத நிலையில் பேச்சிலர்களுக்கு யாரும் வீடு தர மாட்டேன் என்று சொல்லிவிடுவார்கள். இதனை அடுத்து பிரசாந்த் பெண் வேடம் போட்டு தனது நண்பர்களில் ஒருவர்தான் கணவர் என்று பொய் சொல்லி வீடு வாடகைக்கு எடுத்து விடுவார்கள். அதன் பிறகு ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லி இருக்கும் கதையம்சம் கொண்ட படம் தான் ஆணழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement