• Dec 28 2024

பெரியப்பாவை விட்டுக்கொடுக்காத பிரேம்ஜி.. புன்னகையுடன் ஆசி வழங்கிய இளையராஜா!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரை உலகில் பாடகராக அறிமுகமாகி பின்பு தனது நகைச்சுவையால் கலக்கி வருபவர் தான் பிரேம்ஜி அமரன். இவர் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனின் மகன் ஆவார்.

45 வயதான பிரேம்ஜி இதுவரையில் முரட்டு சிங்கிளாகவே காணப்பட்டார். அவரைப் பார்ப்பவர்கள் முதலில் கேட்பது எப்போது கல்யாணம் என்பது தான். ஆனாலும் அது எல்லாம் சகித்துக் கொண்டு இருந்த பிரேம்ஜி, தற்போது திருமணத்தின் மூலம் கேள்விகளுக்கு எல்லாம் சேர்த்து பதிலடி கொடுத்துள்ளார்.

அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜியின் திருமண பத்திரிகையை பகிர்ந்து மணமக்களை இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பிரேம்ஜியின் திருமணம் கடந்த ஒன்பதாம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் வைத்து மிக எளிமையாக நடந்தது.


எனினும் பிரேம்ஜியின் பெரியப்பா ஆன இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை இது இணையத்தில் பேசு பொருள் ஆனது. ஆனாலும் இசைஞானி இளையராஜா சார்லி மகனின் திருமணம் வைபவத்தில் கலந்து கொண்டுள்ளார் இது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்பள்ளி வைக்கும் விதமாக இளையராஜாவை நேரில் சந்தித்து பிரேம்ஜியும் இந்துவும் ஆசீர் பெற்றுள்ளார்கள். அவர்களை வாழ்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இளைய ராஜா. தற்போது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement