• Dec 29 2024

செவ்வந்தி சீரியல் நடிகையின் அம்மா திடீர் மரணம்..! அதிர்ச்சியில் சின்னத்திரை

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்  தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் அறிமுகமாகம் முன்பே திருமணம் ஆகி முதல் கணவருடன் ஒரு மகள் உள்ளார். அவருடன் விவாகரத்து பெற்று பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் அவர்? என்ற விவரம் எதுவுமே இதுவரையில் தெரியவில்லை.

இவர் கேளடி கண்மணி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது அதில் நடித்த அர்னவ் மீது காதல் கொண்டார். பின் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்தார்கள். பின்பு இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்கள்.

சிறிது காலத்திலேயே திவ்யா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு அறிவித்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். எனினும் அர்னவ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் செல்லமா சீரியல் நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதன் பின் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது.


இந்த நிலையில், தற்போது நடிகை திவ்யா ஸ்ரீதரின் தாயார் நீலாவதி உடல்நலக் குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து அவரின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு, திவ்யா ஸ்ரீதரின் சொந்த ஊரான பெங்களூருக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்றைய தினம் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ள நிலையில் சின்னத்திரை வட்டாரங்கள் பலரும் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement