புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது பெண் ஒருவர் இறந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தென் இந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது ஒருநாள் இரவு முழுவதும் என்ன செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் பலரும் தமது வருத்தத்தை தெரிவித்து வருகின்றார்கள்.
d_i_a
அல்லு அர்ஜுன் நேற்றைய தினம் சஞ்சல்குடா என்ற சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள சிறைக் கைதிகளின் பதிவேட்டில் அல்லு அர்ஜுனுக்கு கைதி எண் 76 97 என்ற எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவில் அவருக்கு சிறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அந்த உணவை உண்பதற்கு மறுத்து இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
அதே நேரத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஏ-1 ரக சிறை தயார் செய்யப்பட்டது. ஆனாலும் அவர் அந்த படுக்கையில் படுக்காமல் தரையிலேயே படுத்து தூங்கியுள்ளார். இந்த தகவல் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தெலுங்கு திரை உலகை மட்டும் இல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் இன்றைய தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் அல்லு அர்ஜுன். அவர் வெளியே வந்த போது அவருடைய குடும்பத்தினர் முத்த மழை பொழிந்து வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!