• Jun 03 2025

ப்பா.. சும்மா ஜொலிக்குறாங்களே..! மின்னும் ஆடையில் கிளாமரா போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

மிருதுவான அழகுடன் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டால் மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். இந்திய சினிமாவில் மட்டுமல்லாது, ஹாலிவூட்டிலும் தனது தடத்தை பதித்துள்ள பிரியங்கா, தற்பொழுது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.


2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. அதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படமான 'தமிழன்' மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருந்தார்.


அத்தகைய நடிகையின் இன்ஸ்டா போட்டோஷூட் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.ரசிகர்கள் மட்டுமல்லாது, ஹாலிவூட் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் அந்த போட்டோக்களுக்கு fire emojis, heart emojis என கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.


பிரியங்கா சோப்ரா வெறும் நடிகை அல்ல, அழகும், அறிவும் கொண்ட ஓர் உலகநாயகி. அவருடைய சமீபத்திய போட்டோஷூட் மீண்டும் ஒரு முறை அதை நிரூபித்துள்ளது. அழகு என்பது வயதைக் கடந்த ஒரு தைரியம் என்பதனை பிரியங்கா இந்த போட்டோஷூட் மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement