• Dec 25 2024

பிரியங்கா- மணிமேகலை பிரச்சினை! தேவையில்லாம பேசாதீங்க! அறந்தாங்கி நிஷா பகீர் பேட்டி

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சினைக்கு அறந்தாங்கி நிஷா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  கடந்த சில வாரங்களாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே இருக்கும் பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. 


"நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் பிரச்சனை நடந்தபோது இல்லை. அதனால் யார் மீது தப்பு யார் மீது சரி என்று என்னால் சொல்ல முடியாது. அவர்களிடம் அங்கு என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டால்தான் நான் அவர்களைப் பற்றி கருத்து சொல்ல முடியும். ஆனால் எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. எதற்காக தேவையில்லாமல் சிலர் இணையத்தில் தவறாக பேசுகிறார்கள் அந்த தெரியவில்லை.


இரண்டு பெண்கள் அவர்களுடைய வேலையைப் பற்றி வேண்டுமென்றால் பேசிக் கொள்ளலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கை பற்றி பேசுவது ரொம்ப தவறு. இதற்கு நான் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன். நான் எப்போதுமே பெண்களுக்கு ஆதரவாக பேசுவேன். இப்போதும் ஒரு பெண்ணின் கேரக்டர் குறித்து தவறாக பேசுவதால் நான் இந்த கருத்தை தெரிவிக்கிறேன். அதனால் நான் இருவரில் யார் மீது தப்பு என்று சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement