• Dec 26 2024

திடீரென மொட்டை அடித்த பிரியங்கா நல்காரி.. என்ன ஆச்சு? அதிர்ச்சி புகைப்படங்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

'ரோஜா' உட்பட சில சீரியல்களிலும், சில தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த பிரியங்கா நல்காரி திடீரென தனது முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த நிலையில் அதன் பின்னர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’சீதாராமன்’ மற்றும் ’நள தமயந்தி’ சீரியலில் நடித்தார். ஏற்கனவே அவர் ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’காஞ்சனா 3’ உள்பட சில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரியங்கா நல்காரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொட்டை அடித்து தனது முடியை தானமாக வழங்கினார் என்பது பலர் அறிந்திருக்கலாம். அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் தனது முடியின் சில பகுதியை வெட்டி அந்த முடியை அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக தனது முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி இருக்கிறேன் என்று பிரியங்கா நல்காரி கூறிய நிலையில் அவரது பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement