• Dec 25 2024

மாயாவை பிரிந்த பூர்ணிமா வெளியிட்ட வீடியோ! வெளியே வந்ததும் இப்படி மாறிட்டாங்களே! ரசிகர்கள் அதிர்ச்சி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களாக மாயா, பூர்ணிமா காணப்படுகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை இவர்கள் மீறினாலும், வார இறுதியில் கமல் இவர்களை தட்டிக் கேட்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.

எனினும், பிக் பாஸ் வீட்டில் அதிகமாக மக்களை என்டேர்டைன்மென்ட் பண்ணிய முக்கிய போட்டியாளராக மாயா காணப்படுகின்றார். பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படுகின்ற டாஸ்க்களை போட்டி போட்டு வெற்றி பெறுவதில் மாயாவும், பூர்ணிமாவும் கை தேர்ந்தவர்களாகவே காணப்பட்டனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேற இவர்கள் இருவரின் சதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் தற்போது வரையில் மீம்ஸ், பதிவுகள் உலா வந்தவாரே உள்ளன. இதை தொடர்ந்து மாயா மீது ஏகப்பட்ட வீண்பழிகளும் சுமத்தப்பட்டு பூகம்பமாக வெடித்திருந்தது.

ஆனாலும், இவற்றை எல்லாம் கடந்து மாயா, பூர்ணிமாவின் நட்பு பலராலும் கொண்டாடப்பட்டது. அதிலும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தாய்மார்களுக்கு மிகவும் கவரப்பட்ட, பிடித்துப்போன நபராக மாயா காணப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து பூர்ணிமா வெளியேறியது மாயாவை மிகவும் தனிமைக்கு உட்படுத்தியுள்ளது. அதுபோலவே மாயாவை பிரிந்த பூர்ணிமாவும் சோகமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement