அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தின் வெற்றியினை தொடர்ந்து இப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியாகியது. 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 1800 கோடி வசூலித்து முழு திரை உலகினையும் திரும்பி பார்க்க வைத்தது. பல பிரச்சினைகளின் பின்னர் வெளியாகி இருந்தாலும் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது.
மேலும் இந்த படத்தினை இயக்குநர் சுகுமார் இயக்கியதுடன் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் புஷ்பா 2 இன் பின்னர் எந்த படங்களையும் இயக்க போவதில்லை என அறிவித்து இருந்தார். ஆனால் தற்போது நேர்காணல் ஒன்றில் தனது அடுத்த படம் குறித்து கூறியுள்ளார்.
குறித்த நேர்காணலில் விஜய், அஜித்தை வைத்து தமிழ் படம் எடுக்கவிரும்புவதாக கூறியுள்ளார்.புஷ்பா' படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் தன் மீது திருப்பியவர் இவர் இவ்வாறு கூறியது. தல தளபதி ரசிகர்களிற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Listen News!