• Dec 25 2024

ரச்சிதாவ வச்சி தான் தினேஷ காலி பண்ணனும்.! எமோஷனலாக கவுக்க பிளான் போடும் மாயா! ஆதரமான வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றாலும்  தப்பான ரூட்டில் பயணிப்பதாகவே ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதை சரியென கூறும் வகையில் மாயா, பூர்ணிமா செயற்படும் விதம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு வெளியில் ரசிகர்கள் அதிகம் இருந்ததால், மாயா அவரை தன் டீமில் வைத்து கொண்டு ஒரு கட்டத்தில் பிரச்னை மொத்தத்தையும் அவர் பக்கம் திருப்பினார். இதனால் அவர் தன்பக்கமுள்ள நியாயத்தை சொல்லக் கூட முடியாமல் வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், அதே ரூட்டை பிக் பாஸ் வீட்டிலுள்ள ஏனைய ஆண்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் இருக்கிறார்கள் மாயாவின் புள்ளி கேங்.


இதை தொடர்ந்து மாயாவும் பூர்ணிமாவும் ரகசியமாக பேசிக்கொண்ட வீடியோ ஒன்றும், இந்த வாரம் தினேஷ் கேப்டனா வந்தா காலி தான் எனக் கூறிய வீடியோவும் வைரலாகிறது. 

அந்த வீடியோ ஒன்றில்,  தினேஷை நாம் பேசி ஜெயிக்க முடியாது. அவரை நம்ம சைடில் வச்சிக்க வேண்டும். டம்மியா வச்சு நமக்காக மட்டுமே பேச வைக்க வேண்டும் என்கிறார் மாயா. 

அத்துடன், அவர் மனைவி ரச்சிதாவ வச்சி தான் அவர எமோஷனலாக பேச வைக்கணும், பிறகு நாங்க ஆறுதல் சொல்லலாம் என்கிறார் மாயா. அதற்கு ஓகே செய்யலாம் என்கிறார் பூர்ணிமா. 


மற்றுமொரு வீடியோவில், இந்த வீக் நாம நினைக்கிற மாதிரி இருக்காது. தினேஷ் கேப்டனா வந்தா காலி என்று மாயா சொல்ல, நான் கேப்டன செய்வன் என்று பூர்ணிமா சொல்ல, நானும் அவன கத்தி கத்தி செய்வன் என்று ஜோவிகாவும் சொல்கிறார்.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களின் சொந்த வாழ்க்கையோடு விளையாடுவது எப்படி நியாயம் ஆகும்? என மாயா கேங்கை கழுவி ஊற்றி வருகின்றனர் ரசிகர்கள்.





Advertisement

Advertisement