• Dec 26 2024

ரச்சிதாவும் தினேஷும் இணைய வாய்ப்பே இல்லையா?- ரச்சிதா எடுத்தி திடீர் முடிவு- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி சீரியல் தான். இதில் லீட் ரோலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் மீனாட்சியாகவே மாறிவிட்டார். அந்த அளவுக்கு அவருக்கு இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.இதையடுத்து சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


ஜாலியாக சென்றுவந்த இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தினேஷை பிரிந்து சென்றார் ரச்சிதா. இவர்களின் பிரிவால், இவர்கள் நடித்து வந்த சீரியலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தினேஷை ரச்சிதா விவாகரத்து செய்ய உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

இதனை ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட சூசகமாக கூறியதோடு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது பிக்பாஸிற்குள் இருக்கும் தினேஷ் ரச்சிதாவுடன் இணைந்து வாழவே ஆசைப்படுவதாகவும் கூறினார்.

இதனால் இவர்கள் இருவரும் இணைய வேண்டும் என ரசிகர்கள் தமது ஆசையைக் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் ரச்சிதா ஆன்மீக வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதால் தினேஷ் ரச்சிதாவுடன் இணைய வாய்ப்பில்லையே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement