• Dec 26 2024

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தங்கத்தில் புரளும் ராதாவின் மகள் கார்த்திகா... இத்தனை கோடிக்கு சொந்தமானவரையா திருமணம் செய்தார்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை ராதா இயக்குனர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்கிற தமிழ்  திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர்.தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.


10 ஆண்டுகள்   தொழிலில் முன்னிலையில் இருந்த ஹோட்டல் தொழிலதிபரான ராஜசேகர் நாயர் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளார். அண்மையில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவிற்கு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக ரோஹித் என்பவருடன் திருமணம்  4 நாளாக மிகவும்  பிரம்மாண்டமாக நடந்தது.


சுமார் 500 சவரன் நகையுடன் ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயர்ஸ் காரில் வந்து இறங்கி அசத்தினார் கார்த்திகா. தற்போது நடிகை கார்த்திகாவின் கணவர் ரோஹித் குறித்தும், அவரது சொத்து மதிப்பும் குறித்து தான் ஒரு தகவல் வலம் வருகிறது.

அதாவது கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரோஹித் துபாயில் இளம் தொழிலதிபராக கலக்கி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இப்படிபட்ட ஒருத்தரை தான் நடிகை ராதாவின் மகள் திருமணம் செய்துள்ளார். 

Advertisement

Advertisement