• Dec 26 2024

பூமர் மாமியாருக்கு சரியான பதிலடி கொடுத்த ராதிகா! திடீரென பல்டியடித்த மாமனார்! கோபிக்கு சவுக்கடி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது அடுத்த நாட்களுக்கான ப்ரோமோ  வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

அதன்படி, கோபி தனது அம்மா, அப்பாவுடன் இருந்து பாக்கியாவை பற்றி கதைத்துக் கொண்டுள்ளார். அதில், பாக்கியா போய் எவ்வளவு நேரம் ஆச்சு, என்ன நடக்குதோ தெரியல என கோபியின் அப்பா கவலைபட்டுக் கொண்டு இருக்க, நீங்க வேணும்னா பாருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில தலைய தொங்க போட்டுட்டு பாக்கியா வருவா.. வந்து பொருட்காட்சி நடக்கும் என்று நினைச்சன் மாமா ஆனா ஒன்னுமே நடக்கல மாமா.. என சொல்லுவா பாருங்க என்று கோபி கிண்டலாக சொல்லிக் கொண்டு உள்ளார்.


இதனை சமையலறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ராதிகா கோவத்தில் வந்து கோபிக்கு பேசுகிறார். அதில், உங்களுக்கு வேற வேலையே இல்லையா கோபி, இனி பாக்கியாவ பத்தி கதைக்க வேணாம் என சொல்ல, இடையில் ஈஸ்வரி,  நீ என்ன அடிக்கடி பாக்கியாவுக்கு சப்போர்ட் பண்ணுறா என ராதிகாவை திட்டுகிறார்.


இதை தொடர்ந்து, அவங்க அந்த காண்டாக்ட் எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா? என பாக்கியாவுக்கு ஆதரவாக பேசிவிட்டு கிளம்ப, கொஞ்சம் நில்லும்மா.. இவ்வளவு புத்திசாலியா  இருக்க.. நீ எப்படி கோபிய கல்யாணம் பண்ணினா என கோபியின் அப்பா கேட்கிறார். 


Advertisement

Advertisement