• Dec 26 2024

ஈஸ்வரிக்கு ராதிகா வச்ச ஆப்பு.. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கும் கமலா? எழிலுக்கு அதிஷ்டம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின்  இன்றைய எபிசோட்டில்,  கோபியும் ஈஸ்வரியும் சோபாவில் இருக்க கமலா கோபிக்கும் ஈஸ்வரிக்கும் காபி கொண்டு போய் கொடுக்கிறார். ஆனால் ஈஸ்வரி எனக்கு வேணாம் என்று சொல்கிறார். கோபி ஏன் என்று கேட்க, ஒரு மணி நேரமா காபி கேட்டுக் கொண்டிருக்கேன் யாரும் கண்டுக்கல என்று சொல்லுகிறார்.

அதற்கு உங்கள் அம்மா இன்ஸ்டன்ட் காபி எல்லாம் குடிக்க மாட்டாங்க பில்டர் காபி தான் குடிப்பாங்களாம்.  அதுக்கு பாலை காய்ச்சனும் டிகாஷன் போடணும் நேரம் ஆகும் என்று கமலா சொல்ல, ஈஸ்வரி எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று ரூமுக்கு எழுந்து செல்கிறார்.

மறுபக்கம் எழில் கதை சொல்லி விட்டு வெளியே வர பாக்கியா அவருக்காக காத்திருக்கின்றார். நீ போனதும் பயமா இருந்துச்சு அதனால தான் கிளம்பி வந்துட்டேன் என்று சொல்ல,  நீ எனக்கு அம்மாவா கிடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் என்று எழில் கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். மேலும் இந்த விஷயத்தை அமிர்தா கிட்ட நீயே சொல்லு அவ சந்தோஷப்படுவா என்று சொல்கிறார்.

அதன்பின் கோபி ஹாலில் உட்கார்ந்து போன் பேசிக் கொண்டிருக்க, ராதிகா கோபியை ரூமுக்கு அழைக்கின்றார். ஏற்கனவே கமலா உள்ளே இருக்க இருவரும் சேர்ந்து ஈஸ்வரியின் அட்டூழியங்களை லிஸ்ட்  போட்டு சொல்லுகின்றார்கள். கோபி அவரது புகார்களை கேட்க முடியாமல் இப்ப நான் என்ன பண்ணனும் என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு உங்க அம்மா டூ மச்சா பண்ணிட்டு இருக்காங்க ஒரு கர்ப்பிணி பெண் இருக்கிற வீட்டுல கலைச்சிடு கலைச்சிடுனு சொன்னா நல்லாவா இருக்கும். இன்னொரு முறை அப்படி சொன்னா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று கமலா ஷாக் கொடுக்கிறார்.


மேலும் பாலை கொட்டி விட்டு எங்களை தொடக்கச் சொல்றாங்க என்று சொல்ல, இனிமேல் ஏதாவது செஞ்சா என்ன கூப்பிடுங்க நான் துடைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வர, ஈஸ்வரி எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு நின்றது தெரிய வருகிறது.

உடனே கோபி பதற்றமாக, ஈஸ்வரி மயக்கம் போட்டு விழுகிறார். பயத்தில் என்ன ஆச்சு என்று கேட்க, ராதிகா தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து எழுப்புகிறார். மேலும் ஈஸ்வரிய ஹாஸ்பிடலுக்கு கூப்பிட, நான் எதாவது சொன்னால் பிரச்சனை தான் வரும் அதனால நானே பாத்துக்குறேன். காலையில இருந்து காபி குடிக்கல பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடல அதனால மயங்கி இருப்பேன் என்று ஈஸ்வரி சொல்லுகிறார்.

அதற்கு இன்னும் சாப்பிடலையா அன்று கேட்க, நம்ம வீட்டில் ஒன்பது மணிக்கு தான் சாப்பிடுவோம். உங்க அம்மா 8.30 மணிக்கு சாப்பிடுவாங்க என்று எங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க, ஏன் ராதிகாவுக்கு தெரியும் தானே என்று கோபி கோபப்படுகிறார். அதற்கு அவளையே அவளால பார்த்துக்க முடியல இதுல உங்க அம்மாவ வேற பார்த்துக் கொள்ளணுமா என்று கேட்க, நானே போய் சாப்பாடு கொண்டு வாரேன் என்று கோபி செல்கிறார் இதுதான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

Advertisement

Advertisement