• Dec 25 2024

கோபி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் உறைந்த ராதிகா! பாக்கியா தலையில் விழுந்த பேரிடி!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பார்க்க வந்த ராதிகாவை திட்டி வெளியே அனுப்பிய ஈஸ்வரி கோபியிடம் ராதிகா மீதுதான் தவறு இருக்கிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அத்தோடு பேசி கோபியின் மனசை மாற்றி  தனது வீட்டுக்கு கூட்டி போக திட்டம் போடுகிறார். பிறகு இனியா செண்டிமெண்டாக கோபி இடம் பேசி  கோபி மனசை மாற்றி விட்டார்கள். 


இது தெரியாத ராதிகா, கோபியை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு போவதற்கு ஆம்புலன்ஸ் அல்லது காரை ரெடி பண்ணட்டுமா என்று நர்சிடம் கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, நீ எதுவும் பண்ண தேவையில்லை நாங்க பார்த்துக்கிடுவோம். என்னுடன் என் மகனை கூட்டிட்டு போறேன் என ராதிகாவிடம் சொல்லி விடுகிறார். இதை பார்த்த எழில், பாக்யாவிற்கு ஃபோன் பண்ணி அப்பாவை அங்க தான் கூட்டிட்டு வரப் போறாங்க உனக்கு தெரியுமா என்று கேட்கிறார்.


அதற்கு பாக்கியா நான் ஏற்கனவே இதைப்பற்றி முடியாது என்று உங்க பாட்டியிடம் பேசி விட்டேனே என்று சொல்கிறார். ஏன் மறுபடியும் இப்படி பண்ணுறாங்க நான் நேரடியாக ஹாஸ்பிடலுக்கு வருகிறேன் என்று சொல்லி பாக்கியா ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறார். ராதிகா முன்னாடி பாக்கியா, ஈஸ்வரிடம் சண்டை போடும் விதமாக கோபி நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. ராதிகாவுடன் போவது தான் சரியாக இருக்கும் என்று சொல்கிறார்.


ஆனால் ஈஸ்வரி புரியாமல் சண்டை போடும் பட்சத்தில் கோபியிடமே இந்த விஷயத்தை கேட்டுக் கொள்ளலாம் என்று ராதிகா சொல்கிறார். உடனே ரூமுக்குள் அனைவரும் போகிறார்கள். ராதிகா நீங்க என்னுடன் தான வரீங்க என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி நீ என்னுடன் நம்ம வீட்டுக்கு வந்துவிடு. நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிய நிலையில் கோபி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் பாக்கியா நம்ம வீட்டுக்கு வந்து விடுவாரோ என்ற பயத்தில் நிட்கிறார். 

 "d_i_a


கடைசியில் கோபி நான் என்னுடைய அம்மாவுடன் போய் விடுகிறேன் என்னை விட்டு விடு ராதிகா என்று சொல்கிறார். உடனே சந்தோஷத்தில் கோபியை கூட்டிட்டு போவதற்காக எல்லாம் ஏற்பாடுகளையும் ஈஸ்வரி செழியன் பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். கோபி இப்படி சொல்லியதை  எதிர்பார்க்காத ராதிகா வாயடைத்து போய் ஏமாற்றத்துடன் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போய்விடுகிறார் இதோடு ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement