• Jan 30 2025

மொத்த குடும்பத்துக்கும் ராதிகா போட்ட கண்டிஷன்..? இனியாவுக்கு பாக்கியா சொன்ன அட்வைஸ்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ராதிகா ட்ரிப் கூட்டிப் போன விஷயத்தை வைத்து ஈஸ்வரி வீட்டில் பஞ்சாயத்து பண்ணி கொண்டு இருக்க, அங்கு வந்த ராதிகா நாளைக்கு நாங்க மூன்று பேரும் வீட்டை விட்டு கிளம்பப் போகின்றோம், பாக்கியா கொடுத்த பத்து நாள் டைம் முடிந்துவிட்டது என்று மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறார்.

ஆனாலும் கோபி தான் பாக்கியாவிடம் பேசுகின்றேன் இன்னும் ஒரு பத்து நாள் இருந்து விட்டுப் போகலாம் என்று சொல்ல, முடியாது நாளைக்கு கிளம்பியே ஆகணும் என்று ராதிகா சொல்லிச் செல்கின்றார். 

d_i_a

இதனால் ஈஸ்வரி ராதிகாவிடம் எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டியா? உனக்கும் ஒரு பொண்ணு இருக்கத்தானே அவள விட்டுட்டு நீ இருப்பியா என்று அழுது புலம்புகின்றார்.


இதை தொடர்ந்து கோபி ராதிகாவின் ரூமுக்கு சென்று இங்கேயே எல்லாரும் சந்தோஷமாக இருக்கலாமே என்று சொல்ல, அது எப்படி முடியும்.. இது உங்களுடைய முன்னாள் மனைவியின் வீடு.. இப்படி இருக்கிறது அசிங்கம் என்று சொல்லுகின்றார்.  கோபி எவ்வளவு கெஞ்சியும் தனது முடிவிலிருந்து மாறவில்லை ராதிகா.

இன்னொரு பக்கம் கோபி வீட்டை விட்டு போகப்போவதே நினைத்து இனியா அழுது கொண்டிருக்க பாக்கியா அவருக்கு சமாதானம் சொல்லுகின்றார். மேலும் நீ ஒரு பக்கம் மட்டும் தான் பார்க்கின்றா.. என்னை பற்றி யோசிக்கிறா இல்லை என்று சொன்னதோடு நாளைக்கு உன்னுடைய அப்பா கிளம்பும் போது தயவு செய்து எமோஷனலாக எதுவும் செய்த செய்யாதே என்று பக்குவமாக சொல்லுகின்றார். 

கோபி இரவு முழுவதும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்க மறுநாள் காலையில் ராதிகா பெட்டி படுக்கையுடன் ரெடியாகின்றார். இதன்போது கோபிக்கு கீழே வந்து ஈஸ்வரிடம் பேச, அவர் ராதிகாவுடன் பேசினியா என்று கேட்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement