• Dec 26 2024

கோபிக்கு ஏற்றிவிட்ட ராதிகாவின் அம்மா! ஈஸ்வரிக்கு வந்த சந்தேகம்? பழனி அனுப்பிய செல்பி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரெஸ்டாரண்டில் பாக்கியா, பழனிச்சாமி பேசிக்கொண்டு இருக்க, செல்வி அதைப் பார்த்து அமிர்தாவிடம் காட்டி சிரிக்கிறார். மேலும், அக்காக்கும் பழனி மேல ஒரு இது இருக்கு என சொல்ல, அம்மா பத்தி எனக்கு தெரியும் அப்படி ஒன்றும் இருக்காது என  அமிர்தா சொல்லுகிறார்.

மறுபக்கம் ராதிகா வீட்டில், கோபி வந்ததும் என்ன மாப்பிள்ளை குழந்தை விசயத்துல குழம்பி இருக்கீங்க என்று சொல்லி, பாக்கியா பிள்ளைகள் பாக்கியாவுக்கு தான் சப்போர்ட், உங்கள வெளிய கூட அனுப்பினாங்க தானே என ஏத்தி விடுகிறார்.

இதை தொடர்ந்து கோபி, ராதிகா வீட்டுக்கு வர ஈஸ்வரி விசாரிக்கிறார். மேலும் இவங்க இரண்டு பேர் நடவடிக்கையும் சரி இல்ல நீ கவனிச்சியா என பாக்கியாவிடம் கேட்க, நான் என உங்க பிள்ளையை கவனிக்கணும் என்று பதிலடி கொடுக்கிறார்.


அங்கு எல்லாம் பேசிக்கொண்டு இருக்க, ஈஸ்வரி அமிர்தாவுடன் மட்டும் பேசவில்லை. இதை பார்த்து ஆறுதல் சொல்லுகிறார் பாக்கியா. ரூம்க்கு போனதும் அமிர்தா சோகமாக இருக்க, எழில் என்ன நடந்தது என விசாரிக்கிறார்.

அதற்கு அமிர்தா, நாம குழந்தை பெத்துக்குவோம் என்னால வீட்ட சமாளிக்க முடியல. பாட்டி கதைக்கிறா இல்லை என சொல்ல, அடுத்தவங்க பேச்சை கேட்டு நாம குழந்தை பெத்துக் கூடாது என சமாளிக்கிறார்.

இன்னோரு பக்கம் பழனி விதம் விதமாக உடுப்புகளை மாற்றி செல்பி எடுக்கிறார். அதனை பாக்கியா பார்க்க வேண்டும் என்று ஸ்டேட்டஸ்ல வைக்கிறார். அதன்படியே இனியாவும் பாக்கியாவும் இருக்கும் போது இனியா அந்த போட்டோக்களை பார்த்து சிரிக்க, பாக்கியாவும் வாங்கி பார்க்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement