• Dec 26 2024

என் அம்மாவுக்கு அடுத்து நீங்க தான்.. விழுப்புரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராகவா லாரன்ஸ்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!



நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ரசிகர்களை சந்தித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துஎன் அம்மாவுக்கு அடுத்தது நீங்க தான்என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிய பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரது கைவசம் மூன்று படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தனது ரசிகர்களை சென்னையில் சந்திப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் ரசிகர் ஒருவர் ஊருக்கு திரும்பி சென்றபோது விபத்தில் மரணம் அடைந்தது அவரை பெரிய அளவில் பாதித்தது

 

இதனை அடுத்து புகைப்படம் எடுப்பதற்கு ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்றும் நானே உங்களுடைய ஊருக்கு வருகிறேன் என்றும் சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார். அந்த வகையில் நேற்று அவர் விழுப்புரம் சென்ற நிலையில் விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் சந்தித்து அவர்களிடம் உரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ்விழுப்புரம் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்.

என் அம்மாவுக்கு பிறகு என் ரசிகர்களை தான் நான் பெரிதாக கருதுகிறேன். அதை நீங்கள் இன்று அனைவரும் நிரூபித்து உள்ளவர்கள். உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், இனி அடிக்கடி பயணம் செய்து ரசிகர்களை அனைவரையும் சந்திப்பேன்,  உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.  ராகவா லாரன்ஸ் பதிவு செய்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement