• Dec 26 2024

படப்பிடிப்பில் தூங்கிய விக்ரம்.. இயக்குனர் ராஜகுமாரனை கலாய்த்து தள்ளிய பிரபலம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'விண்ணுக்கும் மண்ணுக்கும்என்ற படத்தின் படப்பிடிப்பின்போது விக்ரம் பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருப்பார் என பிரபலம் ஒருவர் இயக்குனர் ராஜகுமாரனை கலாய்த்து உள்ளார். இந்த படத்தில் விக்ரமை ராஜகுமாரன் சரியாக பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜகுமாரன் இயக்கத்தில் சரத்குமார், விக்ரம், குஷ்பு, தேவயானி நடிப்பில் உருவான திரைப்படம்விண்ணுக்கும் மண்ணுக்கும்’. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.



'விண்ணுக்கும் மண்ணுக்கும்படத்தின் படப்பிடிப்பை தான் ஒரு நாள் காண சென்றபோது விக்ரம் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், ஏன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டபோதுகாலையில் வர சொன்னார், படப்பிடிப்பு இருக்கிறது என்று, ஆனால் இப்போது வரை என்னை கூப்பிடவே இல்லை, அதனால் தான் தூங்கிக் கொண்டிருக்கிறேன்என்று விக்ரம் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்

இந்த படத்தில் சரத்குமார், தேவயானி காட்சிகளில் தான் அவர் அதிகம் கவனம் செலுத்தியதாகவும், விக்ரம் கால்ஷீட்டை வாங்கி அவர் வேஸ்ட் செய்ததாகவும் அந்த பிரபலம் குற்றஞ்சாட்டி இருந்தார். சேது என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த விக்ரம்,  ராஜகுமாரன் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக கால்ஷீட் கொடுத்த நிலையில் அவருடைய கால்ஷீட்டை ராஜகுமாரன் வேஸ்ட் செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொசுறு செய்தியாக இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் ராஜகுமாரனுக்கும் தேவயானிக்கும் காதல் ஏற்பட்டு அதன்பின் அது திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement