• Dec 25 2024

2.0 திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி! வைரல் போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய 73 ஆவது வயதிலும் இளமை மாறாமல் நடித்து வருகிறார்.

தற்போது டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

கூலி படத்தில் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விட்ட நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இதன் டைட்டில் டீசர்  வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருந்தது.

இந்த நிலையில், தன்னுடைய நண்பரும் 2.0 திரைப்படத்தில் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக பணியாற்றிய ராஜூ மகாலிங்கம் கட்டிய புதிய வீட்டில் பங்கேற்று சிறப்பித்துள்ளார் ரஜினிகாந்த். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


குறித்த நிகழ்வு மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில், அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரஜினிகாந்துக்கு உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளார் ராஜு  மகாலிங்கம்.

அவர் வெளியிட்ட பதிவில், நான் என் வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு  அழைத்தேன். அவர் எப்போதாவது வருகை தருவேன் என்று உறுதியளித்தார். மில்லியன் கணக்காளர்கள் அவரை பார்க்க ஏங்குகின்றார்கள். ஆனால் அவர் திடீர் என வந்து என் விருப்பத்தை நிறைவேற்றினார். என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை..... நன்றி தலைவா என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement