• May 09 2025

ஐசரி கணேஷ் மகளின் திருமண கொண்டாட்டத்தில் .....! ரஜனி காந் மற்றும் கமலஹாசன் .....!

Roshika / 10 hours ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது மகளின் திருமணத்தினை இன்று பிரமாண்டமாக நடத்தி இருந்தார் .இத் திருமண விழாவிற்கு பல திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கு கொண்டு மணமக்களுக்கு  வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ரஜனி மற்றும் கமலும் திருமணத்தில் கலந்து கொண்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது .


 மேலும் திருமண விழாவுக்கு இயக்குநர்கள் மணிரத்தினம், வெற்றிமாறன், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகைகள் அமலாபால் ,அதிதி ஷங்கர் ,ராதிகா எனப்  பலரும் கலந்து கொண்டதுடன் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அந்தவகையில் ரஜனி காந்த ,கமல்ஹாசன் மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.


 கமலஹாசன் வெள்ளை நிற கூர்க் அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் வந்திருந்தார். அத்துடன் கையில் பெரிய பரிசு பொருளுடன் வந்திருந்தார். அதே போன்று ரஜனியும் மிக எளிமையான முறையில் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். அவரும் கிஃப்ட் பாக்ஸ் ஒன்றினை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement