• Oct 05 2025

இன்றும் அனைத்து ஷோக்களும் சேல் அவுட்... அடித்து நொறுக்கும் காந்தாரா

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும்  155 கோடிகளை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. 

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது.  இந்த படத்தை ரிஷப் செட்டி இயக்கி, அவரே முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார்.  விஜய் கிரகந்தூர் ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

காந்தாரா படத்தின் முதலாவது பாகம் 16 கோடியில் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 400 கோடி வரையில் வசூலில் லாபம் ஈட்டியது.  இதன் இரண்டாவது பாகமும் 125 கோடி  பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.  இந்தப் படமும்  அதிக வசூலை  ஈட்டும்  என  கணிக்கப்பட்டுள்ளது. 


உலகளாவிய ரீதியில் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் மொத்த வசூல் 200 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகின்றது.  மூன்றாவது நாளுக்கான வசூல் விபரம் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' உலகமே அதிரடி காட்டும் வகையில் ஆஸ்திரேலியாவில் 98% , நியூசிலாந்தில் 70%  என அனைத்து ஷோக்களும் சேல் அவுட் ஆகியுள்ளதாம். 

இதனால் இந்திய சினிமாவை உலக மேடையில் பெருமையுடன் நிறுத்துகின்றது எனவும் கலாச்சாரத்தையும், கலையையும் உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் காந்தாரா முதலிடம் என பேச்சுக்கள் பரவலாக எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 



 

Advertisement

Advertisement