கன்னடத்தில் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காந்தாரா திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. தற்போது காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
கன்னட சினிமாவின் முக்கிய நட்சத்திரமான ரிஷப் செட்டி காந்தாரா படத்தை இயக்கி நடித்திருந்தார். நிலத்தின் உரிமைக்காக போராடும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், தெய்வத்தின் துணையோடு அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களையும் திரையில் பார்க்கும்போது உண்மைக்கு நிகராக இருந்தது. இதனாலையே இந்த படமும் வெற்றி பெற்றது.
காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஷூட்டிங் சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர். ரிஷப் செட்டி கூட விபத்தில் சிக்கினார். இது தெய்வீக ரீதியில் பார்க்கப்பட்டது. ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்தப் படம் முழுமை பெற்றது.
இந்த நிலையில், காந்தாரா படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்ட இடத்தில் உள்ள அமானுஷ்யங்கள் பற்றி பிரபலம் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், அங்கு இருக்கிற மக்களைப் பாதுகாக்கின்ற தெய்வம் காலாகாலமாக அங்கு எதுவும் நடக்காமல் பாதுகாக்கின்றது. அங்கு சின்னதாக அசம்பாவிதம் நடந்தாலும் அதன் கோபம் உக்கிரமாக இருக்கும்.
இது கண்ணுக்குத் தெரியாத சக்தி. ஆனால் அபரிதமான சக்தி. ரொம்ப உக்கிரமான சக்தி. இன்னைக்கும் அது கோபமாகவே உள்ளது. அடுத்து அது சாபமாக மாறும். அப்படி மாறினால் அதன் நிலைமை ரொம்ப மோசமாகும் எனக் கூறியுள்ளார்.
Listen News!