கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது வரையில் இது தொடர்பான சர்ச்சை விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் விம்பத்தை நீதிமன்றம் சுக்குநூறாக உடைத்துள்ளது. விஜய்க்கு தலைமை பண்பு என்பது இல்லை. கரூர் சம்பவத்திற்கு பின் ஓடிவிட்டார் என்று சாட்டியதோடு மட்டும் இல்லாமல் தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் அந்த காட்சி தொடர்பில் சாடியுள்ளது.
அடுத்த கட்டமாக தவெக கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகளை கைது செய்தால் என்ன செய்வதென ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம் தமிழக வெற்றிக்கழகம்.
இவ்வாறான நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திரா துணை முதல்வருமான நடிகர் பவன் கல்யாண் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், அரசியலில் பல தடைகளையும் சதிகளையும் தாண்டி வருபவன் தான் தலைவன். நான் எதிர்கொண்ட அதே பிரச்சனையை தான் இப்போது விஜய் எதிர்கொள்கின்றார். நாங்கள் நடைபெறும் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இனி தமிழ்நாட்டில் விஜய் அவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Listen News!