சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில் , மீனாவும் சத்யாவும் தனது அம்மாவின் பூக்கடையில் எந்த தவறும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆதாரங்களை திரட்டுகின்றார்கள். அதன்படி அங்கு பூ வாங்கியவர்களிடம் கையெழுத்துகளை சேகரிக்கின்றார்கள்.
அந்த நேரத்தில் கோவிலுக்கு வெளியே நின்ற மீனாவின் வண்டியை சிந்தாமணியின் அடியாட்கள் தூக்குகின்றார்கள். அதன் பின்பு மீனா வந்து வண்டியை தேட காணவில்லை. இதனால் மீனா அழுது புலம்புகின்றார்.
இன்னொரு பக்கம் முத்துவும் செல்வமும் மீனாவின் அம்மாவுடைய கடையை தூக்க வைத்த அதிகாரியுடன் பேச்சு கொடுக்கின்றனர். அங்கு அவர் பத்தாயிரம் ரூபாய் பணமும், மாதா மாதம் 2000 ரூபாய் பணமும், விசேஷ வைபவங்கள் என்றால் பூ டெக்கரேஷன் பண்ண வேண்டும் எனவும் செல்வத்துக்கு ஓடர் போடுகின்றார்.
அதன்பின்பு செல்வமும் முத்துவும் அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க உயர் அதிகாரியை சந்திக்கின்றனர். எனினும் அவர் இதனை ஆபீஸில் வந்து கதைக்குமாறு வெளியே அனுப்புகின்றார். அந்த நேரத்தில் விஜயாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதாக சொன்ன கோகிலா அங்கு வருகின்றார்.
இது எனது வீடு தான் என்று தனது கணவரிடம் முத்து விஷயத்தில் உண்மை இருக்கும் அதை என்னவென்று கண்டுபிடிக்குமாறு சொல்லுகின்றார். முத்துவும் நடந்தவற்றையெல்லாம் சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து மீனா பைக் திருட்டுப் போனதை பற்றி போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போகின்றார். அங்கு அருணும் சீதாவின் அம்மாவின் விஷயம் பற்றி இன்ஸ்பெக்டருடன் பேசிக்கொண்டு இருக்கின்றார் .
அங்கு சென்ற மீனா நடந்தவற்றை சொல்ல, கம்ப்ளைன்ட் கொடுக்குமாறு சொல்லுகின்றார் அருண். அதன்பின்பு இவங்க குடும்பத்துல என்ன நடந்தாலும் என்ன தேடி வராங்க.. இதை வச்சு எப்படி ஆவது முத்து மீது உள்ள மரியாதையை குறைக்க வேண்டும் என்று திட்டம் போடுகின்றார்.
ஸ்ருதி புதிய ரெஸ்டாரண்டுக்கு செப் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றார். அதன் பின்பு மனோஜ் புதிய பிரான்ச் ஒன்றை திறப்பதற்கு இடம் தேடி பேசிக் கொண்டிருக்கின்றார். இதனை வீட்டில் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் முத்து வழக்கம் போல கிண்டல் செய்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!