பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கடந்த மாதம் நீர்சத்து குறைபாட்டால் திடீரென உயிரிழந்தார். அவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவருடைய மனைவி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ரோபோ சங்கரின் நினைவு படம் நேற்றைய தினம் அவர்களுடைய குடும்பத்தினரால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது அவர்களுக்கு நெருங்கிய சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ரோபோ சங்கரின் மனைவி, மகள் மற்றும் அவருடைய கணவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
இதன்போது இந்திரஜா கூறுகையில், எனக்கு பிரஸ்மீட் புதிது கிடையாது. ஆனால் அப்பா இல்லாமல் இங்க உட்கார்ந்து இருப்பது கடினமாக உள்ளது. அப்பாவின் இறுதிச்சடங்கில் துணையாக இருந்தவர்களுக்கு நன்றி. அப்பா எப்போதும் சிரிப்பும், நகைச்சுவையும் இருக்கும் இடத்தில் இருப்பார். அவர் விட்டுச் சென்ற கடமைகளும் பொறுப்புகளும் எனக்கு உண்டு. அதை நான் செய்வேன்.
எனக்குத் தெரிந்து அம்மா, அப்பா இருவருக்கும் இடையில் காதல் என்பது வெறும் பேச்சு அல்ல. அவர்கள் வெளியில் செல்வது இல்லை. இருவரும் தங்கள் காதலை நடனத்தில் தான் பரிமாறினார்.
அப்படித்தான் என்னுடைய அம்மா, அப்பாவை வழியனுப்பி வைத்தார். எனது அம்மா, அப்பா மீது காதலை வெளிப்படுத்தும் மொழி நடனம் தான். அதன் அடிப்படையில் தான் அவர் நடனம் ஆடி அப்பாவை வழி அனுப்பினார்.
எங்களுக்குத் தெரிந்து காதலுக்கு முன் உதாரணம் என்னுடைய அப்பா, அம்மா தான். அந்த அளவுக்கு இருவரும் அந்நியோனியமாக இருப்பார்கள். அவர்களுடைய காதல் மொழி நடனம். இதை விமர்சிக்கின்றீர்கள் என்றால் அதுதான் அவர்களின் புரிதல் என்று தான் சொல்ல வேண்டும். இது தொடர்பில் மேலும் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. அவர்களே காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள் என்றார்.
Listen News!