தென்னிந்திய சினிமாவில் தனது இனிமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது 'The Girlfriend' எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், இப்படம் அவருடைய ரசிகர்களுக்குச் சாதாரணமான ஒரு படமாக இல்லாது அவரின் முக்கியமான லீட் ரோலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 4, 2025) பிற்பகல் 3.06 மணிக்கு இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் ‘The Girlfriend’ தொடர்பான எதிர்பார்ப்பு மிக அதிகமாகக் காணப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனாவுக்கு இது ஒரு கேரியர் டர்னிங் போயின்ட் ஆகக் கருதப்படுகிறது. இவர் ஏற்கனவே தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆனால், "The Girlfriend" படம் என்பது ஒரு பெண்மையின் உளஉணர்வுகள், மனநிலை, மற்றும் மனித உறவுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படமாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டைட்டில் ஏற்கனவே வெளிவந்த நிலையில், ராஷ்மிகாவின் இந்தப் புதிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் மட்டுமல்லாது திரை விமர்சகர்களும் காத்திருக்கின்றனர்.
Listen News!