• Dec 25 2024

கண் கலங்கும் ரஜனிகாந்! பிரபல நடிகரின் மரணம் குறித்து பேசும் ரஜனி? அது யார் தெரியுமா?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

மாநிலத்துக்குள் மட்டும் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை இந்திய அளவில் எடுத்து சென்றவர் நடிகர் ரஜனிகாந்த் ஆவார். இன்றளவிலும் முன்னி நடிகராக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் தனது நண்பரின் மரணம் பற்றி பேசியுள்ளார்.


தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக ரஜனி காந் இருந்தாலும் அவர் கன்னடத்தை சேர்ந்தவர் ஆவார். அவ்வாறு கன்னடத்தில் நகைச்சுவை நடிகனாக இருந்து தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் மாறிய இவரது நண்பர் துவாரகேஷ் சமீபத்தில் காலமானார்.


இவரது இழப்பு பற்றி  உருக்கமான பதிவொன்றை போட்டுள்ளார் ரஜனி. அவர் கூறுகையில் "எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது..காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர்.. இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன..அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்." என தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவு இதோ  


Advertisement

Advertisement