தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டதுடன் அந்நிகழ்வில் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் பூஜையில் உரையாற்றிய குஷ்பு, திரையுலகத்தின் வளர்ச்சியைப் பற்றி பேசினார். அத்துடன் , நடுவர் அதன்போது 'உலக அளவில் சூப்பர் ஸ்டார் யார்?' எனக் கேட்டிருந்தார்.அதற்கு குஷ்பு, "அது ஒருவருக்கு மட்டும் தான் பொருந்தும் அதுவும் ரஜினி சாருக்கு மட்டும் தான்!" என்று உறுதியாக கூறினார்.
அவர் கூறியவுடன் அங்கு இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கைத்தட்டிக் கொண்டாடினர்கள். குஷ்பு கூறிய கருத்துகளுக்கு ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக இருந்தாலும், சிலர் இதை வேறு விதமாகப் புரிந்து கொண்டனர். தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளனர். இருப்பினும், குஷ்பு நடிகர் ரஜினியை மட்டும் சூப்பர் ஸ்டார் என நிகழ்ச்சியில் குறிப்பிட்டதால், இது சமூக ஊடகங்களில் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.
குஷ்பு மற்றும் ரஜினிகாந்த் சிறந்த நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இருவரும் தமிழ் சினிமாவில் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, அண்ணாமலை , பாண்டியன், மன்னன் போன்ற திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கின்றன. அந்தவகையில் குஷ்புவின் இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!