• Feb 26 2025

ரஜினிக்கு சுருதிகாஷன் ஜோடியா..? வைரலாகும் கூலி திரைப்பட அப்டேட்...

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் sun pictures தயாரித்து வரும் கூலி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. இப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


மிகவும் பரபரப்பாக இப் படத்தின் வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது.பெரும்பாலும் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகின்றது மற்றும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சுருதிகாஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது இவர் இப் படத்தில் நடிகர் சத்ய ராஜின் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது அது கைகூடியிருப்பதாக ஒரு செய்தி வைரலாகியுள்ளது.மேலும் இது தொடர்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement