• Apr 26 2026

மலையாள படத்திடம் அடி வாங்கிய ரஜினி படம்! இந்த அசிங்கம் தேவையா ஐஸ்சு..! பிரபலம் மரண கலாய்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரருமான ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் லால் சலாம். ஆனாலும் இது எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை படுதோல்வி ஆனது. 

இந்தத் திரைப்படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். ஆனாலும் லால் சலாம் படத்தின்  தோல்வியை அடுத்து மொத்த பழியையும் ரஜினிகாந்த் மேலே போட்டு விட்டார் ஐஸ்வர்யா.

தர்பார், அண்ணாத்தே படங்களில் படுதோல்விக்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் ரஜினிகாந்திற்க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அத்துடன் 600 கோடி ரூபா மட்டில் வசூலையும் செய்து சாதனை படைத்திருந்தது.


இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் வசூலை, தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் முறியடித்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.

அதாவது தற்போது தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டி வரும் திரைப்படமாக மஞ்சும்மல் பாய்ஸ் அதிரடி காட்டி வருகிறது.


இதனால் கம்பேரிசன் ட்வீட் போட்டு ரஜினிகாந்தையும், ஐஸ்வர்யாவையும் கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். 

இதே வேளை, தமிழ்நாட்டில் லால் சலாம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 16 கோடி ரூபாய் வசூலை பெற்ற நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 17 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement