• May 28 2026

ராம் சரணின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியான மிரட்டலான 'க்ளிம்ப்ஸ்'.. தெறிக்கவிடும் வீடியோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. விளையாட்டு பின்னணியில், குறிப்பாக கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், மாஸ் மற்றும் எமோஷன் கலந்த ஒரு முழுமையான எண்டர்டெயினராக அமையும் என கூறப்படுகிறது. 


இப்படத்திற்கு இசை அமைப்பது A. R. ரஹ்மான் என்பதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

மேலும், இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் இணைக்கும் வகையில் உருவாகும் இந்த படம், பான்-இந்தியா அளவில் கவனம் ஈர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே இப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பெத்தி’ படக்குழு ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த வீடியோவில் ராம் சரணின் மாஸ் லுக், கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த க்ளிம்ப்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியவுடன் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் ‘பெத்தி’ திரைப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மேலும் பலமடைந்துள்ளது. இப்படம் வெளியாகும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement