• Nov 16 2026

ராம் சரணால் விக்ரமிற்கு வந்த சிக்கல்! தள்ளி போகும் திரைப்பட ரிலீஸ்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் என்ற வெற்றி படத்தினை கொடுத்து விட்டு அடுத்து அடுத்து தனது படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்ற சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வதுதிரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்த திரைப்படத்துக்கு 'வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் 2ம் பாகம் கதை முதலில் வெளியிட்டு பின்னர் பாகம் ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் எஸ் ஜே சூர்யா,சுராஜ் வெனசராமுடு, சித்திக ,துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


சிபு தமின்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள் ஆனால் தற்போது ராம் சரண் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்கு வெளியால்தால் 'வீர தீர சூரன்' படம் தள்ளி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 


Advertisement

Advertisement