• Dec 25 2024

மாலையும் கழுத்துமாக நிற்கும் ராமமூர்த்தி.. எதிர்நீச்சல் சீரியல் வில்லனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சர்ப்ரைஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் மாரிமுத்து. நெக்கட்டிவ் ரோலாக இருந்தாலும் இதில் இவர் பேசும் இந்தாம்மா ஏய் என்ற வசனம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.

இதையடுத்து,கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு ஒரு நல்ல இடத்தை அடைந்து கனவை தொடும் நேரத்தில் மாரிமுத்து திடீரென மறைந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


மாரிமுத்துவின் மறைவைத் தொடர்ந்து தற்பொழுது குணசேகரனாக ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

சினிமாவில் வில்லனாக மிரட்டி வரும் இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து, மாரிமுத்துவின் இடத்தை பூர்த்தி செய்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 


இந்த நிலையில், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்துவரும் ராமமூர்த்தியின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள்.

இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement