• Dec 25 2024

குழப்பத்தில் நின்ற பாக்கியாவிடம் ராமமூர்த்தி கேட்ட கேள்வி- செழியனுக்கு எதிராக நிற்கும் ராதிகா- கடும் கோபத்தில் ஈஸ்வரி-Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராதிகாவை ரூமுக்குள் கூட்டிட்டு போன கோபி நீ எதுக்காக பாக்கியாவுக்கு சர்ப்போட் பண்ணிக் கொண்டிருக்கிற என்று கேட்க, ராதிகா நியாயம் எங்கு இருக்கிறதோ அந்த பக்கம் தான் என்னால் பேச முடியும் எல்லோரும் எதற்காக பாக்கியாவை கேள்வி கேட்டிட்டு இருக்கிறீங்க தப்பு பண்ணினது செழியன் அவனை ஒருவார்த்தை கேட்க மாட்டீங்களா என்று கேட்கின்றார்.


அப்போது கோபி இருந்தாலும் இதைப் பாக்கியா தான் எங்க கிட்ட சொல்லி இருக்கோனும்,என்று சொல்லிவிட்டு தயவு செய்து நீ கீழே போய் எதுவும் சொல்லிடாத இங்கேயே இரு என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார். தொடர்ந்து கீழே ஈஸ்வரி பாக்கியாவைத் திட்டிக்கொண்டே இருக்கிறார். அப்போது ராம மூர்த்தியும் எங்க கிட்ட சொல்லியிருக்கலாம் தானே நீ தனியாவே மண்டையைப் போட்டு உடைச்சுக்கிறதுக்கு எங்க கிட்ட சொல்லி இருந்தால் ஏதாவது தீர்வு கிடைச்சிருக்கும் தானே என்கின்றார்.

மறுபுறம் கோபி செழியன் ரூமுக்குச் சென்று செழியனிடம் நடந்தது பற்றி விசாரிப்பதோடு செழியனுக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். நானும் உங்க அம்மாவும் பிரிஞ்சதுக்கு காரணம் எங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஒத்து வரல அதனால தான் வேற கல்யாணம் பண்ண வேண்டியதாச்சு,ஆனால் உனக்கு அப்பிடியா கவலைப்படாத ஜெனி கட்டாயம் திரும்ப வருவா என்கின்றார்.


அடுத்து ஜெனியின் அம்மா தன்னுடைய கணவருக்கு போன் பண்ணி நடந்த விஷயம் எல்லாவற்றையும் சொல்லி விட்டு, ஜெனியிடம் பாக்கியாவுக்கும் இந்த விஷயம் தெரிந்தும் எதுவும் சொல்லாமல் தானே இருந்தாங்க, இனிமேல் நீ அங்க போகவே கூடாது என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார். பின்பு வீட்டில் பாக்கியாவிடம் இனியாவும் எழிலும் சென்று பேசுகின்றனர்.


அப்போது எழில் நீ இதை எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்கலாம், இனி ஏதும் பிரச்சினை என்றால் சொல்லிடு என்று சொல்ல பாக்கியா கணேஷ் விஷயத்தையும் எப்படியாவது எழிலிடம் சொல்லிய வேண்டும் என்று யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement