• Dec 26 2024

'தளபதி 69’ படத்தில் ரம்பா தான் நாயகியா? அதற்கு தான் இந்த சந்திப்பா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யை இன்று ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த சந்திப்புக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ள நிலையில் ’தளபதி 69’ படத்தில் ரம்பா தான் ஹீரோயின் என்றும் கூறப்படுகிறது.

’தளபதி 69’ திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் மட்டுமின்றி அது ஒரு அரசியல் சார்ந்த படம் என்றும் இதில் பாடல், காமெடி ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்தது என்றும் கூறப்படுகிறது.'



எனவே இந்த திரைப்படத்தில் இளம் நாயகிகள் இல்லாமல் ஏற்கனவே நடித்த 90s நாயகி விஜய்க்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் பரிந்துரை செய்ததாகவும், இதனை அடுத்து தன்னுடன் ஏற்கனவே ’மின்சார கண்ணா’ ’நினைத்தேன் வந்தேன்’ போன்ற வெற்றி படங்களில் நடித்த ரம்பா இதற்கு சரியாக இருப்பார் என்று விஜய் முடிவு செய்து அவரை டிக் செய்ததாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தான் ரம்பா விஜய்யை இன்று சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இன்றைய சந்திப்பின்போது ரம்பா ’தளபதி 69’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் தான் என்பதும் படக்குழுவினர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement