• Dec 26 2024

அடுத்தடுத்து நிகழும் பிரபலங்களின் திருமணங்கள்.. யோகா மாஸ்டரை கரம் பிடித்த ரம்யா பாண்டியன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர், மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனாலும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படங்கள் பெரிய அளவு பெயரை பெற்று தரவில்லை.

ரம்யா பாண்டியன் மக்கள் மத்தியில் பிரபலமானதற்கு முக்கிய காரணமே அவர் நடத்திய மொட்டை மாடி போட்டோ ஷூட் தான். ஏனைய நடிகைகளை போல பணத்தை எக்கச்சக்கமாக செலவு செய்யாமல் மிகவும் சிக்கனமாக மொட்டை மாடியிலேயே தனது இடுப்பழகை காட்டி இவர் நடத்திய போட்டோ சூட் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

d_i_a

ரம்யா பாண்டியனுக்கு படங்கள் கை கொடுக்காத நிலையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பற்றினார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் விதவிதமான சமையல்களை கையாண்டிருந்தார்.


கடந்த மாதம் ரம்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்பு தீபாவளி தினத்தன்று அவர் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை ரம்யா பாண்டியன் வெளியிட்டார். யோகா பயிற்சிக்கு சென்றபோது அங்கு யோகா மாஸ்டராக இருந்த லோபல் தபாலுடன் நட்பு ஏற்பட்டு காதல் ஆக மாறி உள்ளது.

இந்த நிலையில், ரம்யா பாண்டியனின் திருமணம் இன்றைய தினம் ரிஷிகேஷ் கங்கை நதிக்கரை ஓரத்தில் உள்ள கோயிலில் எளிமையாக நடைபெற்றுள்ளது. இவர்களுடைய திருமணத்தில் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு உள்ளார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement