• Dec 25 2024

அட்லீக்கு ஐஸ் வைக்கும் ரன்வீர்! பாலிவுட் நடிகரை எடுபுடியாக மாற்றிய அட்லீ! வைரல் வீடியோ

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

 நடிகர்களை கொண்டாடிய காலம் கடந்து சமீப காலங்களில் மீடியா துறையின் வளர்ச்சியால் நடிகர்களை விட பல சிறந்த இயக்குனர்கள் தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். அவ்வாறு பாலிவுட் நடிகர்களின் விருப்பத்திற்குரிய  இயக்குனராக இருப்பவர் அட்லீ ஆவார்.


ஆரம்ப காலங்களில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக சினிமா துறைக்குள் வந்து ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியவர் அட்லீ ஆவார். தொடர்ந்து விஜயை வைத்து இவர் இயக்கிய அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும் இந்திய அளவில் பிரபலமானது ஜவான் திரைப்பதின் மூலமே ஆகும்.


இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இயக்குனர் சங்கரின் மகள் திருமணத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் ரன்வீர் சிங் அட்லீயின் ஆடையை சரிசெய்து தலைமுடியை கோரி விட்டு ஸ்டைலாக மாற்றி பின்பு அட்லீயுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். ரன்வீர் அட்லீயை வைத்து அடுத்த 1000 கோடி படம் நடிப்பதற்காகவே இவ்வாறு ஐஸ் வைக்கின்றார் என விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.

Advertisement

Advertisement